களவு வாழ்க்கை
காத்திருத்தலின் சுகமோதனி அலாதிதான்.
ஒவ்வொரு நிமிடமும் இப்போது வருவாள்
அடுத்தடுத்த நிமிடங்களில்
வருவாள் என்ற மலைபோன்ற எதிர்பார்ப்புகளில்
மணிநேரங்கள் நகர்ந்து செல்கின்றன.
இதுவும் ஒரு சுகம்தான்.
சுகங்கள் சுமையாக உருவெடுக்கும் போது
கனவுகளில் மிதக்கிறேன்.
அன்பே நீ வா
உன் வருகைக்காக எவ்வளவு நேரங்கள்
வேண்டுமானாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
காதலில் சுவை காத்திருப்பதில் உணர்கிறேன்.
- சே.முனியசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக