செவ்வாய், 7 செப்டம்பர், 2021

மேருமலையே

அன்புக்குரிய ஆசானே! 
முஸ்டக்குறிச்சி
அரசு மேல்நிலைப் பள்ளியை கட்டிக்காக்கும் மேருமலையே! 

 உம்மை  முதலில் பார்த்தவுடன் அதிக பயம் இருந்தது! 
ஓராண்டு பழகியவுடன் மனதில் அன்புநிறைந்தது! 
உன் வகுப்பு நேரத்தில் பாடம் மட்டுமா கற்றுத்தந்தாய்! 
பகுத்தறிவும் பல கற்றுத் தந்தாய்! 
ஒரு தந்தையாய் இருந்து பல தாரகமந்திரம் 
தந்தாய்! 
வெற்றியின் உச்சத்தை அடைய உன்னத கருத்துக்கள் பல 
தந்தாய்! -நீ
நடத்தும் பாடங்களில் 

வேதியல் மாற்றங்கள் பல உண்டு! 
 இரண்டு ஆண்டுகளில் நீங்கள் கூறிய அறிவுரைகளில் எனக்குள் தோன்றிய மாற்றங்கள் சில உண்டு! ..... 

 இரண்டு ஆண்டுகள் போனாலும்
 ஈரேழு ஜென்மங்கள் உம்மை மறவேல். 

 இந்நன்னாளில் உம்மைப் பணிகின்றேன்

                   -தவசி முத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக