அன்பு ஆசானே!
அறிவியலைக் கடந்து சமூகவியலை கற்றுத்தந்த கலைமகளே!
குடிமையியலை குற்றமில்லா கற்றுத்தந்த
குலமகளே!
பொருளியலை பொருள்பட கற்றுத்தந்த
பொன்மகளே!
புவியியலை புரியும்படி கற்றுத்தந்த
நிலை மகளே!
பத்தாம்வகுப்பில் நீ
பாடம் மட்டுமா கற்றுத் தந்தாய்!
பகுத்தறிவும் பலகற்றுத் தந்தாய்!
நீ எடுக்கும் பாடநேரங்களில்
வரலாறு மட்டுமா கற்றுத் தந்தாய்!
வாழ்க்கை நெறிமுறைகளையும் -நீ வகுப்பில் கற்றுத் தந்தாய்!
உலகம் அறிய உன்னத கருத்துக்கள் பல தந்தாய்!
மாணாக்கர்களை ஊக்கப்படுத்தும் உன் செயல் பாராட்டுக்குரியது!
உம்மை இந்நன்நாளில் வணங்குகிறேன்! 🙏🙏
அறப்பணிக்குத் தன்னை
அர்ப்பணித்த
அன்பு ஆசானுக்கு !ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🙏🙏💐💐💐💐💐.
இப்படிக்கு
தமிழ் மைந்தன்
மு. தவசிமுத்து
இளங்கலை
இரண்டாமாண்டு தமிழ்
நாசியா கலை அறிவியல் கல்லூரி
காரியாபட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக