செவ்வாய், 7 செப்டம்பர், 2021

அன்புள்ள ஆசானே!

அன்புள்ள ஆசானே! 

மாணவர்களுக்கு அறிவு வளர! 
ஆசிரியர் பணியே அறப்பணி என்று எண்ணி! 

அறிவியல் பாடத்திற்கு கிடைத்த அரும் பெரும்செல்வியே! 

நான் படித்த ஆண்டன்று மாலைப் பொழுதில் மாணவர்கள் நாங்கள் மயக்கத்தில் இருந்தோம்! 

அந்தி நேரத்தில் மறையும் ஆதவனாக
ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாய்!- நீ

 பார்த்தவுடன் பயம் இருந்தது! 
 ஓராண்டு பழகியவுடன் மனதில் அன்பு
நிறைந்தது! 

எனக்கு -நீ! 
ஏழாம் வகுப்பில் கொடுத்த பரிசு 
பெரும் பரிசு !!! 
அப்பரிசு ஏழு பிறவி எடுத்தாலும் உன்னை மறக்கச் சொல்லாது! 

எட்டாம் வகுப்பில் எனக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தாய்! 

 ஒன்பதாம் வகுப்பில் ஒளியியலை நன்கு ஒளிர வைத்தாய்! 

பள்ளிப் படிப்பை முடித்து 
எட்டு ஆண்டுகள் ஆனாலும் என்றும் உம்மை 
மறவேன் !!!! 

அன்பு ஆசானே அறிவு வளர ! 
அறிவியல் கற்றுத்தந்த அன்னையே! 

 உன்னை இந்நன்நாளில் வணங்குகிறேன்🙏🙏
 
அன்பு ஆசானுக்கு 
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🙏🙏💐💐💐💐💐💐💐.      
                          

                     இப்படிக்கு
               உங்கள் முன்னாள்                                    மாணவன்
                     தவசிமுத்து
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக