திங்கள், 2 பிப்ரவரி, 2026

முதுகுளத்தூர் கவி

முதுகுளத்தூர் சித்திரகவி மு.தெய்வநாயகம் பிள்ளை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிறந்த இவர் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்று சித்திரக்கவிகள் இயற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்துள்ளார். முதுகுளத்தூரில் அமைந்த வித்தியா சங்கத்தில் உறுப்பினராகவும், கொடைக்கானல் ஆங்கிலக் கிளப்பின் தலைமை எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.1908 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க அச்சு இயந்திரச் சாலையில் பதிக்கப்பட்ட மதுரகவி சுப்பையா பிள்ளையவர்கள் இயற்றிய புவனேந்திர காவியத்திற்கு சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அவர் பாடிய நான்கு பாடல்கள் கிடைத்துள்ளன. நான்கும் வசன் வெண்பாக்கள் மூலம் அமைந்துள்ளன. அவை‘‘சேதுசமஸ்தானத்தை சேர்ந்த முதுகுளத்தூ/ ராதிக்கிராமாந்தரங்களின் வி – வாதங்/ களைத் தீர்க்காநின்ற தர்ம கர்த்தாவிருத்தங்/ களைப் பாடுவதிற்கவி,  சக்ரவர்த்தியான கம்பனுக்குச்ச மானங்கொத்/ துக்கணக்குப் பாத்ய சுபயோகி – முக்கணனை/ யேசிவன் பிர்மாவிஷ்ணு யேசும்க மூதெனு/ தாசம்ப்ர தாயச்சமா, தானநிர்மாணந்தெரிந்ததத்துவ விசாரியெனம்/ மானருமையாய்ப் பெற்றமைத்துனர்ந– வீனகற்பி/ தாலங்காரப் ரசங்கி சார்சனர்சினே கரிந்த்ர/ சாலவல்லவர் மஹாராஜ, ராஜ ஸ்ரீசுப்பையா பிள்ளையவர்கள் ராஜ/ ராஜன் புவனேந்த்ரராஜனது– வீசுபுகழ்/ பெற்றகதையைப் பரந்தமாயி யற்றினார்களைக்/கற்றவர்கண்ணென்று சொன்னார்கள்’’எனும் பாடல்கள் மூலம் அறியலாம். (புவனேந்திர காவியம், பக்.1,2)            மேற்சுட்டியுள்ள நான்கு பாடல்களையும் வெண்பாவாகப் பாடுவதோடு உரைநடையாகவும் ஒன்றாகச் சேர்த்துப் படிக்கலாம். செய்யுள் இயற்றுவதில் இதுவும் புதுமையான ஒரு வகை. இவரைப் போன்று மாம்பழக் கவிச்சிங்க நாவலர் முதலிய வேறு அறிஞர்களும் உரைநடைக் கவிதை செய்திருக்கின்றார்கள்.            வெண்ணீர்வாய்க்கால் சைவசமயச் செல்வர் வேதாந்தச் செம்மல் பண்டித சோதிட வித்துவக் கலாநிதி அருட்புலவர் கா.கூ.வேலாயுதம் அவர்கள் இயற்றிய  ‘திருப்பாடல் திரட்டு’ என்னும் நூலிற்கு (1910) சாற்றுக்கவி ஒன்று பாடியுள்ளார். அதனை,‘‘வெண்ணிநகர் வாழாயுள் வேதமுணர் கூத்தனவேள்/ பண்ணுந் தவத்துதித்த பாக்கியவான் – கண்ணுதன்மேல்/ உள்ளன்பால் வேலா யுதமுரைத்தான் அதன்கொடுமூர்/ தெள்ளுதமிழ்ப் பாபலபாத் தேன்’’எனும் அடிகளில் சாற்றுக்கவிப் பாடியுள்ளார் என்பதை அறியலாம். (திருப்பாடல் திரட்டு, ப.10)    சித்திரகவி இயற்றியவதில் வல்லவராகத் திகழ்ந்த மு.தெய்வநாயகம்பிள்ளை பிறந்த ஊரான முதுகுளத்தூரில் புலவர்கள் கூடி ஒன்றிணையும் சங்கமாக வித்தியா சங்கம் செயல்பட்டு வந்துள்ளது என்னும் செய்தியை அறிய முடிகிறது.

----- 
முனைவர் சே.முனியசாமி உதவிப்பேராசிரியர்மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.

சனி, 17 ஜனவரி, 2026

அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண்தாய் உமர் எனும் நூல் அறிமுக நிகழ்வு

 இஸ்லாமிய இலக்கியக் கழகம்

சார்பில் இன்று 17.01.2026 கம்பம் மீரான் எழுதிய அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண்தாய் உமர் எனும் நூல் அறிமுக நிகழ்வு இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் கருத்துரை வழங்க வாய்ப்பு கிடைத்தது.

நன்றி: முதுவை இதயத்துல்லா & கவிஞர் கம்பம் மீரான்


https://youtu.be/Hcs4tqgiXMU?si=8S6DVM283J9TKAbs


https://www.mudukulathur.com/?p=23983

https://www.dinamalar.com/world-news-nri-ta/gulf/tamil-news/book-launch-event-in-dubai/19035


https://tamil.oneindia.com/news/dubai/annal-gandhiyadaigal-pottriya-aan-thaai-umar-book-intro-function-though-online-766385.html



தமிழர் திருநாள் - பொங்கல் விழா கொண்டாட்டம்

முதுகுளத்தூர் உழவன் தோப்பு நகரில் பொங்கல் விழா

-ஜனவரி 16

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள உழவன் தோப்பு நகரில் இளைஞர் அணி சார்பாக பொங்கல் விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.  தன்னுடைய உரையில் இனி வரும் ஆண்டுகளில் பொங்கல் விழாவானது அறிவு சார்ந்த இலக்கியப் போட்டிகளை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தார். பின்னர் பள்ளி,கல்லூரி, ஊர் மக்கள் படிக்கும் வகையில் நூலகம் அமைப்பதற்கு நூல்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

காலையில் நடத்திய தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு வகை போட்டிகள் வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  உழவன் தோப்பு நகர் (UTC Boys) இளைஞரணி சார்பாக பரிசளிப்பு வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை இளைஞர் அணித்தலைவர் வே.ராஜா, துணைத் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், செயலாளர் ஊ.தமிழரசன், பொருளாளர் மா.சிவமுனீஸ்வரன், கணக்காளர் பூ.வேல்முருகன் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். இறுதியாக கலை நிகழ்ச்சிகள் வைக்கப்பட்டது. ஊர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


முதுகுளத்தூர் உழவன் தோப்பு நகரில் பொங்கல் விழா

-ஜனவரி 16

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள உழவன் தோப்பு நகரில் இளைஞர் அணி சார்பாக பொங்கல் விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.  தன்னுடைய உரையில் இனி வரும் ஆண்டுகளில் பொங்கல் விழாவானது அறிவு சார்ந்த இலக்கியப் போட்டிகளை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தார். பின்னர் பள்ளி,கல்லூரி, ஊர் மக்கள் படிக்கும் வகையில் நூலகம் அமைப்பதற்கு நூல்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

காலையில் நடத்திய தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு வகை போட்டிகள் வைத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  உழவன் தோப்பு நகர் (UTC Boys) இளைஞரணி சார்பாக பரிசளிப்பு வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை இளைஞர் அணித்தலைவர் வே.ராஜா, துணைத் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், செயலாளர் ஊ.தமிழரசன், பொருளாளர் மா.சிவமுனீஸ்வரன், கணக்காளர் பூ.வேல்முருகன் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். இறுதியாக கலை நிகழ்ச்சிகள் வைக்கப்பட்டது. ஊர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

 

முதுகுளத்தூர் உழவன் தோப்பு நகரில் பொங்கல் விழா https://www.mudukulathur.com/?p=23973



வியாழன், 20 நவம்பர், 2025

பொசுக்குடி பிசிராந்தையர்

நட்பிற்கு இலக்கணமாகத் திகழும் பொசுக்குடிப் பிசிராந்தையார்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் ‘பிசிர்குடி’ என்னும் ஊர் உள்ளது. பிசிர்குடி எனும் ஊர் மருவி தற்போது பொசுக்குடி என வழங்கப்பட்டு வருகிறது.  நட்புக்கு இலக்கணமாகத் திகழும் (கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்) சங்க இலக்கியப் புலவர் பிசிராந்தையார் பிறந்த ஊரே பொசுக்குடி ஆகும். இவரது காலம் கி.மு.25 என ந.சி.கந்தையா குறிப்பிடுகின்றார்.
ஆதன் தந்தையென்பது ஆந்தை என மருவியது. இதன் வாயிலாக இவரோ அல்லது இவருடைய முன்னோர்களுள் ஒருவரே ஆதன் என்பவனுக்குத் தந்தையாக இருந்திருக்கலாம் எனவும் அறியலாம்.
பிசிர் என்பது கடலையால் வீசப்படும் நீர்த்திவலைகளைக் குறிக்கும். அப்படியெனில் இந்த ஊர் கடற்கரை ஓரமாக இருந்த ஊர் என விக்கிப்பீடியா குறிப்பிடுகிறது.  அதே போல் ஊற்றுநீர் கிடைக்கும் பகுதியெனவும் குறிப்பிடப்படுகிறது.  “பிசிர் என்ற சொல்லுக்கு நீர்த்துளி அல்லது ஊற்றுநீர் என்று பொருள் இருப்பதால் நல்ல ஊற்றுநீர் கிடைக்கும் ஊராய் இருந்தது” என ஆளவந்தார் குறிப்பிடுகிறார். (இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள்,ப.159)
பிசிராந்தையார் பிசிர்க்குடி (பொசுக்குடி) எனும் ஊரில் பிறந்தார் என்பதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. “பாண்டி நாட்டுப் பிசிர் என்னும் ஊரினர் என்பதும் பிறவும் புறநானூறு கற்றார் பலரும் அறிந்தனவே. அத்தகையப் பெரியோர் பிறந்து சிறந்த பிசிர் என்னும் ஊர் இச்சேதுநாட்டு அலங்காரனல்லூர் (அலங்கானூர்)க்கு அடுத்துள்ள பிசிர்குடி என்பதாகும்” என ரா.இராகவையங்கார் குறிப்பிடுகின்றார். (தமிழகக் குறுநில வேந்தர்கள், பக்.105,106)  
 “பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ளதென்பது,  “தென்னன் பொருப்பன் நன்னாட் டுள்ளும் பிசிரோன் என்ப” என்று கோப்பெருஞ்சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவவூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்குடியென்று வழங்குகின்றதென்பர்” என ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். (தமிழகம் ஊரும் பேரும், ப.101)
கோப்பெஞ்சோழனும் பிசிராந்தையாரும்
பிசிராந்தையார் பாண்டி நாட்டைச் சார்ந்தவர். இருப்பினும் உறையூரை ஆட்சி செய்த கோப்பெருஞ்சோழனுக்குச் சிறந்த நண்பர். கோப்பெருஞ்சோழன் தம் மக்களோடு மனம் வேறுபட்டு வடக்கிருந்து உயிர் நீத்தபோது பிசிராந்தையாரும் வடக்கிருந்து உயிர் நீத்தார். நட்புக்கு இலக்கணமாக கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் என இருவரையும் இன்றளவும் குறிப்பிட்டு வருவதைக் காணமுடிகிறது.  கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரின் நட்பைப் போற்றும் முகமாக  சங்க இலக்கியப் புலவர் கண்ணகனார் புறம் 218 ஆம் பாட்டில் பாராட்டிப் பாடியுள்ளார்.  பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை கூறியது புறம் 184 ஆம் பாடலில் காணப்படுகிறது.
சங்க இலக்கியப் பாடல்கள்
பிசிராந்தையார் அகம், புறம், நற்றிணை  என மூன்று நூல்களில் மொத்தம்  ஏழு பாடல்களைப் பிசிராந்தையார் பாடியுள்ளார். புறநானூற்றில்  67, 184, 191, 211, 212 ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். கோப்பெருஞ்சோழனைக் காணாது நட்புக் பூண்டிருப்பதைச் சேவலிடம் உரையாடும் விதமாக,அன்னச் சேவல்! அன்னச் சேவல்!/ ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்/நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்/ கோடுகூடு மதியம் முகில்நிலா விளங்கும்/மையல் மாலை யாம் கையறுபு கிணையக்” (புறம் :67) எனும் பாடல் அமைகிறது. கோப்பெருஞ்சோழனிடம் என்னைப் பற்றி எடுத்துரைப்பாயாக. அவ்வாறு எடுத்துக் கூறினால் உன் பேடைக்குத் தன்னுடைய அன்பின் சின்னமாக, நல்ல பல அணிகலன்களை அவன் உனக்கு வழங்குவான் எனச் சேவலிடம் பிசிராந்தையார் கூறுவதாக இப்பாடல் அமைகிறது. பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அரசியல் இவ்வாறு இருத்தல் வேண்டுமென்பதை,“காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே/ மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;/ நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உனினே/ வாய்புகு வதனினும் கால்பெரிது கொடுக்கும்;/ அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே”/- (புறம்: 184) எனும் பாடலில் யானைக்குக் கவளம் கவளமாக ஊட்டினால் அது பலநாட்களுக்கு வளரும். பல நாட்கள் பசியடங்கும். மாறாக அதன் போக்கிலே தினைகளில் விட்டால் அது உண்டதைவிட அது காலடிபட்டு அழிவதே அதிகமாகும். அதுபோல அறிவுடை வேந்தனாகிய நீ! அறநெறியறிந்து, குடிகளிடம் இறை கொண்டால், கோடிக்கணக்கான செல்வம் பெற்று அவனும் இன்பறுவதுடன், அவனது நாடும் செழிக்கும், மாறாக, குடிகளை வற்புறுத்தி அறமற்ற பெருந்தொகையான இறையைப் பெற விரும்பினால் அவனுக்கும் அவன் நாட்டிற்கும் கேடு என அறிவுரை கூறினார் என்பதை அறிய முடிகிறது.
தனக்கு வயதாகியும் நரையின்றி இளமையாக இருப்பதற்குரிய காரணங்களை,  “யாண்டுபல வாக, நரையில ஆகுதல்/ யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின் (புறம்:191) எனும் பாடலில்,  தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்பீர்களானால் சொல்கிறேன். சிறப்பான என் மனைவியோடு என்னுடைய மக்களும் அறிவு நிரம்பிய பெற்றோர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் மன்னன் நல்ல ஆட்சி செய்து வருகிறவனென்றனர். நான் வாழும் ஊரில் சிறந்த குணங்களும், நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று பணிவோடு சிறந்த கொள்கையோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர் என்பதை இப்பாடலில் சுட்டுகிறார். பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் நல்லியல்புகளைச் சிறப்பாகப் பாடி, பொத்தியாரோடு நட்புக் கொண்டு விளங்கும் சோழனது மாண்பையும் விளக்குவதாக புறம்:212 சுட்டுகிறது.
இறுதியாக, பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனை நேரில் காணாது அவருடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் துறந்தார். இவ்விருவரின் நட்பு, இன்றளவும் உலகிற்குச் சிறந்த நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எப்பேர்ப்பட்ட சங்க இலக்கியப் புலவர் முதுகுளத்தூர் தாலுகா பொசு குடியைச் சார்ந்தவர் என்பது பெருமைக்குரியதாகும்.

பேராசிரியர் சே முனியசாமி, 
மதுரை.

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665

https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665