அன்பின் சுய ரூபம்!
அக்னியின் மறு உருவம்!
தாலாட்டுப் பாடுபவள் மட்டுமல்ல
தரணியையும் ஆள்பவள்!
பூஜிப்பவள் மட்டுமல்ல பூலோகத்தையும் புரட்டிப் போடுபவள்!
அடுப்படியில் இருப்பதால் அடிமை என்று நினைக்காதே!
பணிந்து போவதால் பயந்தவள் என்று நினைக்காதே!
பாரம் தாங்குவதால் பாவம் என்று நினைக்காதே!
வலிகள் பல தந்தாலும் வாங்கிக்கொண்டு_
வாளெடுத்து வீசும் வல்லமை பெற்றவள்!
பொறுமையாய் இருப்பதால் சோதித்துப் பார்க்காதே!
பொங்கி எழுந்தால்
அப்பேரழிவை நீ
தாங்க மாட்டாய்!
-ரோஷினி
பெண்ணைப் பற்றி அருமையான கருத்து 👌
பதிலளிநீக்குSuper 👍👍👍
பதிலளிநீக்குRealy nice ☺️
பதிலளிநீக்குSuper 🔥🔥
பதிலளிநீக்கு👍
பதிலளிநீக்கு