வியாழன், 18 நவம்பர், 2021

அம்மா

உறக்கம் வந்தால் உறங்குவதும் பசி வந்தால் உண்பதும் இயற்கையின் நியதியாகும்! புலம்புகிறார்கள் பேதை மனிதர்கள்...
இங்கே!அந்த நீதிக்கு சவால் விடுகிறது ஓருள்ளம்! தெய்வங்களும் குடிக்கொள்ளத் துடிக்கும் பேரில்லம்! பொறுமைக்குப் பூமியாம்! 
அதன் உயிர்த்துடிப்பைப் பிடித்துப் பார்த்தார் எவருமில்லை!
ஈருயிர்த்துடிப்பை அறியாதர் பூஉலகில் எங்குமில்லை!
மாரிகூட பொய்த்ததுண்டு இவள் மடிவின் மழை பெய்த்ததில்லை!
வற்றாத நதி கூட காய்ந்ததுண்டு! 
இவள் அன்பென்னும் உள்ளம் கனிந்த தில்லை! 
உறக்கம் தொலைத்தாள் உண்ண மறந்தாள் 
ஆனாலும் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறாள்!
தான் ஈன்ற குழவி இன்னுயிர் வாழ இரவுப்பகல் பாராது உறைகிறாள் தாய்!

                            - ச.கவிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக