வியாழன், 2 பிப்ரவரி, 2023
ஞாயிறு, 19 ஜூன், 2022
ஆழம் கொண்ட ஆளுமை இறையடியான்
இறையடியான்
கன்னட மொழிபெயர்ப்பாளர் & எழுத்தாளர்
(சாகித்ய அகாதெமி விருதுபெற்றவர்)
(04.06.2022- 18.06.2022)
கன்னடத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கக் கூடிய மொழிபெயர்ப்பாளர்கள் சிலரே. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இறையடியான்.
கர்நாடக மாநிலம் சிக்க நரசப்பா-புட்ட நரசம்மா என்பவர்களுக்கு மூன்றாவது மகனாக 04.06.1940 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி கன்னடமாயிருந்தாலும் தமிழ்மொழிக் கல்வி கற்க இவரது பெற்றோர் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தெய்வதாசன் எனும் தனது பெயரில் வடமொழி கலப்பிருந்ததால் இறையடியான் எனத் தூயத்தமிழில் மாற்றிக்கொண்டார்.
பெங்களூரில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்வி மீது அக்கறை வைத்து, நூலகம் ஒன்றை ஏற்படுத்தி மாலை நேர பாடவகுப்பினை எடுத்து வந்துள்ளார். இவர் சிறந்த கால்பந்தாட்ட வீரர். பழைய ஒலிம்பிக் வீரரான கெம்பண்ணாவிடம் எதிரணியில் விளையாடியுள்ளார். இவர் யோகா ஆசிரியராக இருந்துள்ளார். நோய்நொடி எனும் நூலை எழுதியுள்ளார். சிறந்த சமூகப் பணியாளராகவும் விளங்கியுள்ளார்.
கன்னடத்திலிருந்து தமிழிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். மூன்று பிள்ளைகள் இருப்பினும் பெங்களூரில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்த இவர், தனது கடைசி காலம்வரை மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு இறையடியான் மொழிபெயர்த்த ‘சர்வக்ஞர் உரைப்பா’ எனும் நூலினை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இந்நூலை வைத்து, ‘திருக்குறளும் சர்வக்ஞர் வசனங்களும்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தேன்.
இவரைப் பற்றியும் இவரது மொழிபெயர்ப்பு பற்றியும் 2016 ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தில் ‘இறையடியானின் வாழ்வும் பணியும்’ எனும் தலைப்பில் நூல் எழுதினேன். இரண்டு முறை பெங்களூரிலுள்ள இவரது இல்லத்திற்குச் சென்று ஆய்வுத் தொடர்பான செய்திகளைக் கேட்டறிந்தேன். எனது முனைவர் பட்ட பொதுவாய்மொழித் தேர்விற்கு வரவேண்டும் எனப் பணித்த போது, தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார். அன்று இரவு தங்கி காலையில் புகைவண்டியில் ஏற்றிவிடும் வரை ஐயா உடன் இருந்தேன்.
திடீரென்று கைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார். நான் விரைவில் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை அவருக்கு இருந்தது. கடைசியாக ‘அகிலப் பேரொளி’ எனும் மொழிபெயர்ப்பு நூலினை எனக்கு அனுப்பி வைத்தார். பல்வேறு நூல்களை மொழிபெயர்த்தாலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவர். மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு அன்பானவர்.
அறிவுமதியின் நட்புக் காலம் எனும் கவிதை நூல் கன்னடத்திற்கு மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். ஆனால் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிவித்தார். அதேபோல் ‘கருநாடக நாட்டுப்புறவியல்’ எனும் நூல் எழுதி வெளிவந்த போது, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆறு.இராமநாதன் அவர்கள் பாராட்டினார் எனவும் நேர்காணலில் தெரிவித்தார்.
அடுத்து என்ன பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, 1000 பக்கங்களுக்கு கூடுதலாக உள்ள ஒரு நூலினை மொழிபெயர்த்து வருகிறேன் எனக் கூறினார். அதற்குள் அவரது இறப்புச் செய்திதான் காதிற்கு எட்டியது. தனது 82 ஆம் அகவையிலும் ஓய்வில்லாதப் பணியை மேற்கொண்டு, இவ்வுலகை விட்டு மறைந்த ஐயா அவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச்சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாளரை இழந்து விட்டோம்.
செவ்வாய், 25 ஜனவரி, 2022
புதுமைப்பித்தன் நூல்
"வந்தடைந்தார் புதுமைப்பித்தன்"
முதலில் 5 நூல்கள் வேண்டுமெனத் தொடங்கி இறுதியாக 75 நூல்களை முன்பதிவு செய்தேன். பல்வேறு தளங்களில் புதுமைப்பித்தன் நூல் மலிவு விலை விளம்பரம் தென்பட்டாலும் முதலில் நண்பன் மூ.அய்யனார் அனுப்பிய குறுஞ்செய்தி வாயிலாகதான் அறிந்து கொண்டேன். இந்நூல்
கண்டிப்பாக மாணவர்களின் கரங்களில் கிடைக்க வேண்டுமென எண்ணினேன். ஊரடங்கு என்பதால் அனைத்து மாணவர்களையும் ஒருசேர காண முடியாமல் போய்விட்டது. இருப்பினும் புலனம் வாயிலாகத் தொடர்பு கொண்டு நூல் வாங்குவதற்கு மாணவச் செல்வங்களைத் திரட்டினேன்.
இனி மாணவர்களின் கரத்தில் புதுமைப்பித்தனைத் தொலைத்தால்தான் நிம்மதியான தூக்கம் வரும்.
அதுவரையும் கனவுகளில் புதுமைப்பித்தன் என்னைத் தொந்தரவு செய்துக் கொண்டேயிருப்பார்.
------------------------------------
நன்றிக்குரியோர்:
வீ.அரசு ஐயா
சீர் வாசகர் வட்டம்
தோழர் கவிஞர் தம்பி
தோழர் கவிஞர் தம்பி துணைவியர்
105 நன்கொடையாளர்கள்
நண்பன் அய்யனார்
-முனைவர் சே.முனியசாமி
செவ்வாய், 23 நவம்பர், 2021
உறவு
அரவணைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக
பல முகங்களில் உன்னைப் பார்க்கிறேன்.
நீ வாழ்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளுகிறேன்.
- மணிமேகலை
நிமிடம்
இன்பத்திலும் துன்பத்திலும்
நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை
இந்த நிமுடம்கூட நிரந்தரமில்லை
- மணிமேகலை
வரங்கள்
கடவுள் கொடுத்த அழகான வரங்கள் இரண்டு
ஒன்று இயற்கை
மற்றொன்று பெண்
இந்த இரண்டையும் நீ
எப்படி சிதைத்தாலும்
அது உனக்கு நன்மைச் செய்கிறது.
இதை சிதைக்க எப்படிதான் மனம் வருகிறதோ உனக்கு!
-ராஜதுரை
திங்கள், 22 நவம்பர், 2021
பெண்
அன்பின் சுய ரூபம்!
அக்னியின் மறு உருவம்!
தாலாட்டுப் பாடுபவள் மட்டுமல்ல
தரணியையும் ஆள்பவள்!
பூஜிப்பவள் மட்டுமல்ல பூலோகத்தையும் புரட்டிப் போடுபவள்!
அடுப்படியில் இருப்பதால் அடிமை என்று நினைக்காதே!
பணிந்து போவதால் பயந்தவள் என்று நினைக்காதே!
பாரம் தாங்குவதால் பாவம் என்று நினைக்காதே!
வலிகள் பல தந்தாலும் வாங்கிக்கொண்டு_
வாளெடுத்து வீசும் வல்லமை பெற்றவள்!
பொறுமையாய் இருப்பதால் சோதித்துப் பார்க்காதே!
பொங்கி எழுந்தால்
அப்பேரழிவை நீ
தாங்க மாட்டாய்!
-ரோஷினி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
https://tamil.abplive.com/education/madurai-mannar-thirumalai-naicker-college-students-reading-festival-vaasippu-mutram-tnn-270665
-
கடல் மணலைக் கூட எண்ணி விடலாம் பெண்ணின் மனக் கவலைகளை எண்ண முடியாது தனதாசைகளை ,மறைத்து தன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் உன்னதம...
-
எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து சமாதானத்தில் முடிதல் வேண்டும் அவன் கோபத்தில் சண்டையிட்டாலும் சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன். அவனும் ...
-
தென்றலும் காற்றும் தென்னை இலை கீற்றும் குன்றும் மலையும் குறுகிய வளைவும் செவ்வாய் இதழும் செந்தாமாரை மலரும் அடர்ந்த காடும் அடங்காத கடல் அலைய...