புதன், 8 செப்டம்பர், 2021

புலமைப்பித்தனே!

புலமை பித்தனே! 
தமிழ் மீது கொண்ட புலமையினால் புகழ்பெற்றவரே! 

நீ படைத்த பாடல்கள் 
பட்டிதொட்டியெங்கும் பரவி
பாமர மக்கள் மனதில் மகிழ்வை ஏற்படுத்தின! 

எம். ஜி. ஆர் படத்துக்கு _நீ
எழுதிய பாடல்கள்
எட்டுதிக்கும் பரவின! 
பாரெல்லாம் முழங்கின! 


மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் சென்ற பித்தனே! நீ
எழுதிய சுவடுகள்
பித்துபுடுச்சு கிடக்குது! 

நீ எழுதிய எழுதுகோல் எல்லாம்
இன்று ஏக்கத்துடன் இருக்குது! 
உன் மறைவினால்..... 
உன் ஆத்மா இறைவனடி சேர இறைவனை வேண்டுகிறோம்.

            -தவசி முத்து

1 கருத்து: