ஞாயிறு, 30 மே, 2021

மதுபானக் கடைகளை மூடுக

பத்து தினங்களாக ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. ஆகையால் மதுபானப் பிரியர்கள் மதுக் குடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குடிக்காததால் அப்படியொன்றும் பெரிய இழப்பொன்றும் ஏற்படவில்லை. ஒரு வழி அடைக்கும்போது மற்றொரு வழி திறக்கும். தற்போது கடை அடைக்கப்பட்டதால் அவர்களது பழக்கம் வெறொருத் திசையைக் கடந்து குடிக்கும் பழக்கத்தை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிக்காமலும் வாழமுடியும் எனும் ஆழமான சிந்தை இன்றைய நாட்களில் உருவாகியுள்ளது. எத்தனையோ குடும்பங்கள் மதுபானத்தால் சிதைகின்றன. இளம் வயது ஆண் பெண் இருவரும் சீரழிவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு நிரந்தரமாக மதுபானக் கடையை மூடினால் சிறப்பாக இருக்கும்.

"வருமான அதிகம் தருகின்ற கடை டாஸ்மாக்" என்ற  கருத்து அனைவரின் வாயைக் கட்டிப் போட்டாலும், அதற்கு ஈடான பிற தொழிற்சாலையைத் தொடங்கி அதிக இலாபம் ஈட்டலாம்.

படைப்பு -படைப்பாளர்

https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG