செவ்வாய், 23 நவம்பர், 2021

உறவு

 அரவணைப்பில் தந்தையாக 

அன்பில் அன்னையாக 

அறிவுறுத்தும்  ஆசானாக

மனதோடு பேசும் நண்பனாக

பல முகங்களில் உன்னைப் பார்க்கிறேன்.

நீ வாழ்கையை அணுகும் முறையினில்

நான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளுகிறேன்.

                                 - மணிமேகலை

நிமிடம்

 இன்பத்திலும் துன்பத்திலும்

நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை

இந்த நிமுடம்கூட நிரந்தரமில்லை

                    - மணிமேகலை

வரங்கள்

 கடவுள் கொடுத்த அழகான வரங்கள் இரண்டு

ஒன்று இயற்கை

மற்றொன்று பெண்

இந்த இரண்டையும் நீ

எப்படி சிதைத்தாலும்

அது உனக்கு நன்மைச் செய்கிறது.

இதை சிதைக்க எப்படிதான் மனம் வருகிறதோ உனக்கு!

                                -ராஜதுரை

திங்கள், 22 நவம்பர், 2021

பெண்

அன்பின் சுய ரூபம்! 
அக்னியின் மறு உருவம்! 
தாலாட்டுப் பாடுபவள்  மட்டுமல்ல
 தரணியையும்  ஆள்பவள்! 
பூஜிப்பவள் மட்டுமல்ல பூலோகத்தையும் புரட்டிப் போடுபவள்!
அடுப்படியில் இருப்பதால் அடிமை என்று நினைக்காதே!
பணிந்து போவதால் பயந்தவள் என்று நினைக்காதே! 
பாரம் தாங்குவதால்  பாவம் என்று நினைக்காதே! 
வலிகள் பல தந்தாலும் வாங்கிக்கொண்டு_
வாளெடுத்து வீசும் வல்லமை பெற்றவள்! 
பொறுமையாய் இருப்பதால் சோதித்துப் பார்க்காதே! 
பொங்கி எழுந்தால்  
அப்பேரழிவை நீ 
தாங்க மாட்டாய்!

      -ரோஷினி

ஏக்கம்


பறவையாய்  பறக்க ஆசை பயமுறுத்தும் பெற்றோர் இங்கே! 
ஏடுகள் பல கற்க ஆசை ஏளனம் பேசும் உறவினர் இங்கே! 
ஆய்வுகள் பல மேற்கொள்ள ஆசை ஆராயாமல் பேசும் மனிதர்கள் இங்கே! 
சாதிக்கும் வெறி உள்ளே ஜோதியாய்  ஒளிர்கிறது! 
என்ன செய்வது என்று அறியா பேதை மனமோ தவிக்கிறது!

      ரோஷினி

மற்றொரு தாய்

சில நேரம்
அன்னயைப் போலக் கட்டியணைப்பாள்!
சில நேரம் ஆசிரியர் போல கடிந்துரைப்பாள்!
சில நேரம்
கொஞ்சி கொஞ்சி முத்தமிடுவாள்!
சில நேரம்
கோபித்துக் கொண்டு முறைப்பாள்!
சில நேரம் அவளை அரக்கி என்பேன் - ஆனால்
அவள் அரக்கி அல்ல
என் உயிரில் கலந்தவள்!
          மா.சங்கீதா

உடன்பிறப்பு

எனக்காகக் கடவுளால் உருவாக்கப்பட்ட செல்லம் நீ

என்னை யாரிடமும் விட்டுக் கொடுக்காத தங்கம் நீ

நான் உனக்கு அக்காவாக இருந்தாலும் - நீ

எனக்கு ஒரு அம்மாவாக இருந்தாய்

நாம்  சண்டை போடாத நாளே இல்லை

நாம்  விளையாடாத நாளே யிருந்ததுமில்லை

இருவருக்கும் ஆயிரம் சண்டைகள் வந்தாலும்

அடுத்த நொடியே காணாமல் போய்விடும்

உன் சிரிப்பில் நான் மகிழ்கிறேன்

உன்னை விட்டுச் செல்ல மாட்டேன் என்றும்

                            - ஸ்.லீனட் ஜெபக்குமாரி

நம்பிக்கையுடன் ஒரு கவிதை

 என் வாழ்வில் ஒரு நாள் சிரிப்பு

பல நாள் அழுகை

இதுதான் என் வாழ்க்கையாயெனச் சிந்தித்தேன்.

எல்லாம் விதியென மனதைத் தேற்றினேன்

என் வாழ்வில் எவ்வளவோ ஏமாற்றங்கள்

எவ்வளவோ கஷ்டம். - என்னைக்

குப்பையெனத் தூக்கி எரிந்த்தார்கள்

என் வாழ்வு மாறுமா? மாறாதா?

இப்படியாய் தினமும் பயணிக்கிறேன்.

 என் வாழ்க்கை  நிச்சயம்மாறுமென

என் மனம் சொல்கின்றது.

நிச்சயம் மாறும்...

அந்தக் கடவுள் மாற்றுவாரென நம்பி

வலிகளுடன் வாழ்க்கையைத் தொடர்கிறேன்.

                                                     -பா.மோனிஷா 


பறவையாய் பறக்க நினைக்கிறாள்

உன்னைப் பார்த்தவுடன் என்னுள்ளம் பரவசமடைந்தது

உன் அழகினில் என் ஆணவம் அழிந்தது

காந்தத்தன்மை கொண்ட உனது இருவிழிகள்

என் இதயத்தைக் கவர்ந்தது.

அடி வெண்னிலவு முகம் கொண்டவளே!

உன்னை அடைய கழுகு போல் காத்திருக்கிறேன்

நீயோ பறவையாய் மாறி பறந்துவிட்டாயே!

                           -  பா. பாலநாகராஜ்

நவம்பர் மாத மழை

உன் கால்கள் ஓரிடத்தில் நிற்காமல் ஓடுகிறது
கல் முட்களைக் கடந்து செல்கிறது
என் கண்முன் செல்கிறாய் - ஆனால்
கட்டி யணைக்க முடியவில்லை
கால்வாய் ஓரத்தில் காதல் செய்கிறேன்
நவம்பர் மாதத்தில் பிறந்தவளை!
                
                                  -ம.காவியச்செல்வன்

அழகானவள் லூசு


தேவை இல்லாமல் பேசுவாள் அவள் - ஆனால் 

தேவைக்காக மட்டும் ஒருபோதும் பேச மாட்டாள்! 

காரணமே இல்லாமல் சண்டை போடுவாள் -ஆனால்

சண்டைக்காக காரணம் தேட மாட்டாள்- அவள் 

சண்டையிட்ட அடுத்த நொடியே 

இப்போ நீ என்கூட பேசுவியா? மாட்டியா? 

என்றும் முழு உரிமையோடு கேட்பாள் 

அந்த நிமிடம் அந்த அரை லூசுவை ரசிக்க

  முடியுமே தவிர தவிர்க்க முடியாது...

                                                           -வெ.தினேஷ்குமார்

ஞாயிறு, 21 நவம்பர், 2021

காதல்

 உன் கால்கள் ஓரிடத்தில் நிற்காமல் ஓடுகிறது!

கல் முட்களைக் கடந்து செல்கிறது!

என் கண்முன் செல்கிறாய் - ஆனால் 

கட்டியணைக்க முடியவில்லை

கால்வாய் ஓரத்தில் காதல் செய்கிறேன்

நவம்பர்  மாதத்தில் பிறந்தவளை!

              -ம.காவியச்செல்வன்

என் அழகே

சன்னல்  ஓரத்தில் சாய்ந்தபடி

உன் அழகில் வீழ்ந்தேனடி

தினமும் ரசித்தேனடி

பச்சை நிற போர்வைப் போர்த்த

என் பார்வையைக் கொன்றாயடி

 காலையில் கண் குளிர வைத்தாயடி

கல்லூரிச் செல்லும் வேளையில்  

காதல் கொண்டேனடி

இயற்கையே உன்மேல்!
     
                          -ம.தினேஷ் பாண்டி

மலை

இருபது அடி உயரத்தில்

யார் புகை பிடிப்பது? என எண்ணி வியந்தேன்!

அது வேறு யாருமில்லை

மலை தான்.

மலையும்கூட போதைக்கு அடிமையாகுமென

நினைத்தேன்!

பிறகுதான் தெரிந்தது

போதையைப் பயன்படுத்தியது மலை அல்ல

மலைதான் எனக்குப் போதை ஏற்றியதென்று!

            - பால்பாண்டி

என் இனிய தனிமையே!


என் தனிமையை

உன்னிடம் என்னால்

அறிமுகம் செய்ய முடியவில்லை

ஏனோ அந்நியர்களை

அதற்கு அறவே பிடிப்பதில்லை.


நானும் நீயும் சந்திக்கும்

இந்த நொடியில் இங்கில்லா

நம்  தனிமைகள் வேறு எங்கோ

சந்தித்துக் கொள்ளலாம்.


உனக்கு உன் தனிமை 

எனக்கு என் தனிமை

தனிமையின் பெருங்கொடுமை

அதைத் தனியாகவே

அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.


தனியாகவே நிற்க வேண்டி இருக்கிறது

பெருங்கூட்டத்தின் நடுவிலும்

வீடு திரும்ப அழும் குழந்தையாய்

காலைக் கட்டியபடி என் தனிமை.


அனைத்த விளக்கில் எரியும் இருளாய்

கவ்விச் சூழ்ந்த ஒரு தனிமைதான்

இந்தக் கவிதையையும்

எழுதிக் கொண்டிருக்கிறது.

             -அருண்குமார்

தோழி

 அன்புத் தோழியே

கண்ணோடு கண் பார்த்துக் கொண்டோம்!

கையோடு கைக் கோர்த்துக் கொண்டோம்!

மனதில் உள்ளதை உரிமையுடன் 

பகிர்ந்து கொண்டோம்!

காணக் கந்தேடுகிறது

மீண்டும் கிடைத்திடுமா? - நாம்

பழகிய அந்த அழகிய நாட்கள்!

                                                                               ர.லட்சுமிபிரியா

வெற்றி

 புன்னகைத்துப் பாருங்கள்

நட்புகள் கிடைக்கும்!

பிரார்த்த்னைச் செய்யுங்கள்

நல்ல மனம் கிடைக்கும்!

நம்பிக்கை வையுங்கள்

வெற்றி கிடைக்கும்!

உண்மையாய் உறுதியோடு 

உழைத்துப் பாருங்கள்

வாழ்க்கையில் 

எல்லாமே கிடைக்கும்!

                                                     மு.பிரியதர்ஷினி

சனி, 20 நவம்பர், 2021

அண்ணன் தங்கை

எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து

சமாதானத்தில் முடிதல் வேண்டும்

அவன் கோபத்தில் சண்டையிட்டாலும்

சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன்.


அவனும் நானும் வேறில்லை என்பேன்

அவனைப் பிரியக் கூடாதெனக் கடவுளிடம்

வரம் கேட்பேன்

அந்த வரத்தை தர மறுத்தால்

அந்தக் கடவுளையும் வெறுப்பேன்

                                                   ரா.வனிதா

மனித வைரஸ்

 மனிதர்கள் போர் போடுகிறார்கள்

மரத்தை அழிக்கிறார்கள்!

போர் போட ஐம்பதினாயிரம் எனில்

மரத்தை நட ஐம்பது ரூபாய்!


ஆற்றில் கலப்பது கழிவுநீர்!

அது ஏழைகளின் குடிநீர்!

பின் விடுகிறார்கள் கண்ணீர்!


மண்ணின் வளத்தைக் குறைப்பது பிளாஸ்டிக்

மக்காத குப்பை பிளாஸ்டிக்

அது இந்த மங்குனி மனிதர்களுக்குத்  தெரியவில்லை

பிளாஸ்டிக் விஷம் என்று!

                                                          -காசிசுபாஷினி

தேடல்

 நானும் உன்னைத் தேடினேன் நால்பக்கம் எங்கும்

இன்றேனோ உன்னை காணவில்லை

திடீரென இருள் சூழ்ந்த அறையில் ஒளி

அப்பொழுதுதான் தெரிந்தது

என்னிடம் கண்ணாம்பூச்சி விளையாடுகிறாய் என்று!

                                                                         - ஐஸ்வர்யா

நான் கண்ட கடவுள்

 எடுக்கின்ற முடிவு எதுவாக இருந்தாலும் - அது

நேர்வழியாய் செல்ல வேண்டுமென்பாய்!

நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் - அது

பிள்ளைகளுக்குத் தெரியாக் கூடதென எண்ணுவாய்!

நான் குழந்தையாக இருக்கும்போது

என்னை அணைப்பாய்

சிறிது காலம் கழித்து என்னைத் துரத்துவாய்

நான் வெளிவுலகம் கற்றுக் கொள்ள!

நேரில் கண்ட கடவுள் நீதான்.

                                      - வீணுப்பெருமாள்


இயற்கையின் கோபம்


 மனிதா! நீ உன் வியர்வையைச் சிந்தி 

விவசாயம் செய்தாய்

நான் உன் குடும்பத்தை வளம்பெறச் செய்தேன்

காட்டை அழித்தாய்

மழைப் பொய்த்து போனது

நான் ஒரு நெல்மணிக்காக உன் கண்களில்

கண்ணீரை வரவழைத்தேன்

ஆழ்துளைக் கிணற்றுக்காக பூமியில் துளையிட்டாய்- அது

உன் எதிர்கால சந்ததியினருக்குப் போடும்

பாதாள குழி என்று மறவாதே

மனிதா நீ என்னை அழித்தாய் என நினைத்தாயோ?

உன்னை நீயே அழித்துக் கொண்டிருக்கிறாயென

மறந்து விடாதே!

                                                    -வே. நிஹரிஹா

மரம்

 அனைத்து உயிர்களுக்கும் 

உயிர் காற்றை அள்ளிக்கொடுக்கும் உன்னையே

அழிக்க நினைக்கும் இம்மூடர்களை

என்னவென்று கூறுவது?

இயற்கையாகவே நாங்கள் சுவாசிப்பதற்காக

உன் மூச்சுக் காற்றை அளிக்கிறாய் - மனிதனோ

உன்னை அழித்து செயற்கைக் காற்றைத் தேடுகிறான்!


வேரூன்றி முளைத்து வருபவள் நீ

வெயிலிலும் மழையிலும் உறுதியாக நின்று

எந்தத் துன்பத்திலும்  மன உறுதி வேண்டுமென

எங்களுக்குப் பாடாம் புகட்டுகிறாய்

                                                          -சரண்யா

பெண்

 கடல் மணலைக் கூட எண்ணி விடலாம்

பெண்ணின் மனக் கவலைகளை எண்ண முடியாது

தனதாசைகளை ,மறைத்து

தன் குழந்தைகளின் ஆசைகளை 

நிறைவேற்றத் துடிக்கும் உன்னதமான உயிர்!

                                             -அமுதா

பூமித்தாய்

 எத்துன்பத்தையும் ஏற்பாய்

கொடுக்கும் கொடுமைகளைச் சுமப்பாய்

எல்லா உயிர்களுக்கும் உயிர் கொடுப்பாய்

பொறுமையின் சிகரமாய் இருப்பாய்

உன்னை வனங்குகிறேன்.

                                         -இந்துமதி

என்று தீருமோ ...

 பெண்ணைத் தவறாக 

தலைநிமிர்ந்து பார்த்தால்

தலையை வெட்டும் அந்த சட்டம்

எப்போதுதான் வருமோ? என் நாட்டில்.

என் நாட்டின் மக்கள் மீது தவறா?

நாட்டின் மீது தவறா?

கூண்டில் அடைத்த கிளி போல் வாழ்கின்றனர்

என் நாட்டு பெண்கள்!

அந்தக் கூண்டைத் தகர்க்கப் போவது

வருங்கால சட்டமா? சந்ததியா?

                                                                  -ஆஷிபா

அம்மா

 நான் அழுத போது

என்னை சிரிக்க வைத்த முகம்

என்றுமே என்னை

வெறுக்காத குணம்

தவறுகளை மன்னிக்கும் மனம்

அளவுகளே இல்லாத பாசம்

பாசத்தால் என்னை ஆளும் உறவு

 

                         -பெ.துர்காதேவி

இயற்கையின் அழகு

 தென்றலும் காற்றும்

தென்னை இலை கீற்றும்

குன்றும்  மலையும்

குறுகிய வளைவும்

செவ்வாய் இதழும்

செந்தாமாரை மலரும்

அடர்ந்த காடும்

அடங்காத கடல் அலையும்

வர்ணிக்க வார்த்தை இல்லை

என் வர்ணன பூவுலகே

ரசித்திட எல்லை இல்லை

என் இயற்கை அன்னையே

           - பெ.துர்காதேவி

நட்பு

 முகத்தில் தெரியும் அழுகையும்

சிரிப்பையும் காண்பது உறவு.

அழுகைக்கும் சிரிப்பிற்கும்

காரணத்தைக் கண்டறிவது 

நட்பு.

                                     பி.கல்பனா

பறிபோன சுதந்திரம்

 மழையில் நனைய ஆசை உண்டு

மறைத்து வைக்கும் அன்னை இங்கே!

வானில் பறக்க ஆசை உண்டு

கூண்டில் அடைக்கும் தந்தை இங்கே!

பெண்ணாய் பிரந்து விட்டதால் ஏனோ

சின்ன சுதந்திரம்கூட இல்லை!

நான் கேட்பது ஏனோ

சிறு சிறு ஆசைகள் தானே?

சிறிய சுதந்திரம் வேண்டுமெனக்கு

வாழும் வரை வீட்டுச் சிறை

வாழ்ந்த பிறகு கல்லில் அறை!

                                           நா.கலைவாணி

அப்பா

 அம்மா செல்லமா?  அப்பா செல்லமா?

எனக் கேட்கும் ஏதாவது ஒரு தருணத்தில்

சொல்லியிருக்கலாம்

நான் அப்பா செல்லமென...

அன்று நானும் சொல்லவில்லை

ஆனாலும் என அப்பா கோபித்துக் கொள்ளவில்லை

காரணம் விட்டுக் கொடுப்பதையைக் கற்றுக் கொடுப்பவர்

                                                                                 கி.ஞானப்பிரியா
























வியாழன், 18 நவம்பர், 2021

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்


உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்
முனைவர் சே.முனியசாமி
திருமதி மு.சூசன் முனியசாமி
(மார்ச் 2020 வெளியிட்டப்பட்டது)
see link:
https://drive.google.com/file/d/1FS4QWatGoqZgSfWHlfcRjjBr7Ncv-RLb/view?usp=sharing

அம்மா

உறக்கம் வந்தால் உறங்குவதும் பசி வந்தால் உண்பதும் இயற்கையின் நியதியாகும்! புலம்புகிறார்கள் பேதை மனிதர்கள்...
இங்கே!அந்த நீதிக்கு சவால் விடுகிறது ஓருள்ளம்! தெய்வங்களும் குடிக்கொள்ளத் துடிக்கும் பேரில்லம்! பொறுமைக்குப் பூமியாம்! 
அதன் உயிர்த்துடிப்பைப் பிடித்துப் பார்த்தார் எவருமில்லை!
ஈருயிர்த்துடிப்பை அறியாதர் பூஉலகில் எங்குமில்லை!
மாரிகூட பொய்த்ததுண்டு இவள் மடிவின் மழை பெய்த்ததில்லை!
வற்றாத நதி கூட காய்ந்ததுண்டு! 
இவள் அன்பென்னும் உள்ளம் கனிந்த தில்லை! 
உறக்கம் தொலைத்தாள் உண்ண மறந்தாள் 
ஆனாலும் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறாள்!
தான் ஈன்ற குழவி இன்னுயிர் வாழ இரவுப்பகல் பாராது உறைகிறாள் தாய்!

                            - ச.கவிதா

அண்ணன்

ஒளவை போல் ஆனாலும் ஆவேன்
உன்னை அனாதையாய் 
ஆக்க மாட்டேன்

ஊரிலுள்ள உறவினருக்கு
நான் செல்லப் பிள்ளை
எனக்கோ 
நீ தான் செல்லப்பிள்ளை

பிரிக்க முடியா சொந்தம்
மறக்க முடியா பந்தம்
தவிர்க்க முடியா உயிர்
எல்லாமே நீ மட்டுமே...

உன்னைக் கண்டதும்
ஓடி ஒளிந்த 
என் கண்களும் கால்களும்
உன்னைக் 
காணவேண்டுமெனத்
தவமாய் தவமிருக்கின்றன.

                     -இரா.சேதுக்கரசி

முயற்சி

ஏற ஏற இறங்கும் படி போல வாழ்க்கை ...
ஏறுவது நீ தான் இறங்குவது படிதான்...
வெற்றி உன் கண்களுக்கு முன்னே...
 தோல்வி உன் கால்களுக்குப் பின்னே...
 முயற்சி என்றும் உன்னுடன்
..... வெற்றியாக.....

             -பொதும்பாயி

நட்பு

அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம் உறவுகளுக்கு மேலே 
உயிர் ஆனோம் 
காலங்கள் கடந்து சென்றாலும் கடைசிவரை தொடர  வேண்டும் 
நம் நட்பு

       -அனுஷா ஸ்ரீ

மகிழ்ச்சி

மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை
உயிர் உள்ள வரை தான் அன்பு பாசமெல்லாம் பிறகு 
மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே
வாழும்வரை சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாய் வாழ்வோம்
            - கோகிலா

படைப்பு -படைப்பாளர்

https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG