புதன், 8 செப்டம்பர், 2021

புலமைப்பித்தனே!

புலமை பித்தனே! 
தமிழ் மீது கொண்ட புலமையினால் புகழ்பெற்றவரே! 

நீ படைத்த பாடல்கள் 
பட்டிதொட்டியெங்கும் பரவி
பாமர மக்கள் மனதில் மகிழ்வை ஏற்படுத்தின! 

எம். ஜி. ஆர் படத்துக்கு _நீ
எழுதிய பாடல்கள்
எட்டுதிக்கும் பரவின! 
பாரெல்லாம் முழங்கின! 


மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் சென்ற பித்தனே! நீ
எழுதிய சுவடுகள்
பித்துபுடுச்சு கிடக்குது! 

நீ எழுதிய எழுதுகோல் எல்லாம்
இன்று ஏக்கத்துடன் இருக்குது! 
உன் மறைவினால்..... 
உன் ஆத்மா இறைவனடி சேர இறைவனை வேண்டுகிறோம்.

            -தவசி முத்து

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

மேருமலையே

அன்புக்குரிய ஆசானே! 
முஸ்டக்குறிச்சி
அரசு மேல்நிலைப் பள்ளியை கட்டிக்காக்கும் மேருமலையே! 

 உம்மை  முதலில் பார்த்தவுடன் அதிக பயம் இருந்தது! 
ஓராண்டு பழகியவுடன் மனதில் அன்புநிறைந்தது! 
உன் வகுப்பு நேரத்தில் பாடம் மட்டுமா கற்றுத்தந்தாய்! 
பகுத்தறிவும் பல கற்றுத் தந்தாய்! 
ஒரு தந்தையாய் இருந்து பல தாரகமந்திரம் 
தந்தாய்! 
வெற்றியின் உச்சத்தை அடைய உன்னத கருத்துக்கள் பல 
தந்தாய்! -நீ
நடத்தும் பாடங்களில் 

வேதியல் மாற்றங்கள் பல உண்டு! 
 இரண்டு ஆண்டுகளில் நீங்கள் கூறிய அறிவுரைகளில் எனக்குள் தோன்றிய மாற்றங்கள் சில உண்டு! ..... 

 இரண்டு ஆண்டுகள் போனாலும்
 ஈரேழு ஜென்மங்கள் உம்மை மறவேல். 

 இந்நன்னாளில் உம்மைப் பணிகின்றேன்

                   -தவசி முத்து

தலைமை ஆசனே!

எமது பள்ளியின் தலைமை ஆசனே!

 நான் படித்தஆண்டில் தாயைப்போல - பல 
தாரக மந்திரம்  தந்தாய்! 

அன்னை தெரசாவைப்போல் 
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினாய்! 

உன் அன்புக்கு யாரும் ஈடில்லை! 
உன் பணிக்கு என்றும் ஓய்வில்லை!
 
ஒப்பில்லா பணியை ஓய்வெடுக்காமல் செய்யும் 
அன்பு ஆசானுக்கு 
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

-தவசிமுத்து

அன்புள்ள ஆசானே!

அன்புள்ள ஆசானே! 

மாணவர்களுக்கு அறிவு வளர! 
ஆசிரியர் பணியே அறப்பணி என்று எண்ணி! 

அறிவியல் பாடத்திற்கு கிடைத்த அரும் பெரும்செல்வியே! 

நான் படித்த ஆண்டன்று மாலைப் பொழுதில் மாணவர்கள் நாங்கள் மயக்கத்தில் இருந்தோம்! 

அந்தி நேரத்தில் மறையும் ஆதவனாக
ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாய்!- நீ

 பார்த்தவுடன் பயம் இருந்தது! 
 ஓராண்டு பழகியவுடன் மனதில் அன்பு
நிறைந்தது! 

எனக்கு -நீ! 
ஏழாம் வகுப்பில் கொடுத்த பரிசு 
பெரும் பரிசு !!! 
அப்பரிசு ஏழு பிறவி எடுத்தாலும் உன்னை மறக்கச் சொல்லாது! 

எட்டாம் வகுப்பில் எனக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தாய்! 

 ஒன்பதாம் வகுப்பில் ஒளியியலை நன்கு ஒளிர வைத்தாய்! 

பள்ளிப் படிப்பை முடித்து 
எட்டு ஆண்டுகள் ஆனாலும் என்றும் உம்மை 
மறவேன் !!!! 

அன்பு ஆசானே அறிவு வளர ! 
அறிவியல் கற்றுத்தந்த அன்னையே! 

 உன்னை இந்நன்நாளில் வணங்குகிறேன்🙏🙏
 
அன்பு ஆசானுக்கு 
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🙏🙏💐💐💐💐💐💐💐.      
                          

                     இப்படிக்கு
               உங்கள் முன்னாள்                                    மாணவன்
                     தவசிமுத்து
 

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

ஆசிரியர் தின கவிதை

அன்பு ஆசானே! 
அறிவியலைக் கடந்து சமூகவியலை கற்றுத்தந்த கலைமகளே! 
குடிமையியலை குற்றமில்லா கற்றுத்தந்த
குலமகளே! 
பொருளியலை பொருள்பட கற்றுத்தந்த 
பொன்மகளே! 
புவியியலை புரியும்படி கற்றுத்தந்த
நிலை மகளே! 
பத்தாம்வகுப்பில் நீ
பாடம் மட்டுமா கற்றுத் தந்தாய்! 
பகுத்தறிவும் பலகற்றுத் தந்தாய்! 
நீ எடுக்கும் பாடநேரங்களில்
வரலாறு மட்டுமா கற்றுத் தந்தாய்! 
வாழ்க்கை நெறிமுறைகளையும் -நீ வகுப்பில் கற்றுத் தந்தாய்! 
 
உலகம் அறிய உன்னத கருத்துக்கள் பல தந்தாய்! 
 மாணாக்கர்களை ஊக்கப்படுத்தும் உன் செயல் பாராட்டுக்குரியது! 

உம்மை இந்நன்நாளில் வணங்குகிறேன்! 🙏🙏

அறப்பணிக்குத் தன்னை
அர்ப்பணித்த 
அன்பு ஆசானுக்கு !ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்🙏🙏💐💐💐💐💐.    


  இப்படிக்கு
  தமிழ் மைந்தன்
  மு. தவசிமுத்து
இளங்கலை 
இரண்டாமாண்டு தமிழ்
நாசியா கலை                      அறிவியல் கல்லூரி
காரியாபட்டி

சனி, 4 செப்டம்பர், 2021

ஆசிரியர் தினம்- கவிதை

தமிழன்னைக்கு தலைமகனே! 
தரணி அறியஇருக்கும்
எனது தமிழ் ஆசானே! 
தமிழுக்கு தொண்டு செய்ய-நீ
அர்ப்பணித்த பணி
ஆசிரியப்பணி! 
ஓராண்டு கற்றுத்தந்தாய்
எனக்கு தமிழின் சிறப்பை ஒளிபெறச்செய்தாய்! 
எமக்குள் உன் தமிழன்னையால்
ஒளிவட்டம் தோன்றச்செய்தாய்! 
நான் கனவு காணும் பணி ஆசிரியர் பணி! 
அப்பணியில் எமக்கு ஆசானாக இருக்கும் உமக்கு! 
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 

-தவசி முத்து
இளங்கலை முதலாமாண்டு
நாசியா கலை அறிவியல் கல்லூரி
காரியாபட்டி

படைப்பு -படைப்பாளர்

https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG